காதலனே காதலனே

எங்கிருக்கிறாய் கள்வனே !
நீ எங்கிருக்கிறாய்
உன் முகமும் முகவரியும் நான் அறியேன்
அழகும் அகமும் கூட அறியேன்
உன்னை பார்க்க விழிகள் ஏங்குகின்றன
உன் குரல் கேட்க செவிகள் தவிக்கின்றன
எத்திசையில் காணேன் நீ வீற்றிருக்கும் எழிலை
மனம் தவம் கிடக்கிறது உன்னை காண
தேகமெல்லாம் சிலிர்க்கிறது உன்னை என்ன என்ன
எந்தன் ஆறறிவும் ஏங்கி நிற்கிறது அடைமழையின் அமைதி காண
இடியை பிளந்து பிறக்கும் வெளிச்சமா நீ
மழலை சிரிப்பில் பிறக்கும் மகிழ்ச்சியா நீ
வார்த்தைகளின் விளையாட்டில் பிறக்கும் கவிதையா நீ
வர்ணிக்கும் முத்துக்களில் உணர்கிறேன் உன்னை
நீ வர தாமதம் ஆனால் என் உயிர் கரைவதில் சிலிர்க்கறேன்
இந்த வலி இனிக்கிறது
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ஒவ்வொரு நாழிகையும் உன் உருவம்
பற்றிய சிந்தனைகள்
என் உள்ளத்தில் பல வேதி வினைகளை நிகழ்த்துகிறது
உன்னுயிர் எனதென அறிவேன்
உன்னை நிச்சயம் நான் அடைவேன்
பார்க்கும் இடமெல்லாம் உன் நினைவே...
உயிரில்லா நியாபகங்களாய் ஊஞ்சலாடுகிறது
எப்போது வருவாய் நீ
காத்திருக்கிறேன் நான்
ஆசையுடனும்
ஆறாத ஆவலுடனும்...