காதல் ... .....

விழியோரம் பூத்தவளே
என் விழியோடு சேர்ந்தவளே ....
அழகான பார்வையிலே
என் மனதோடு கோர்த்தவளே ....
உன் வழிகள் தானே எனை ஈர்த்துச் செல்ல ...
அரை நொடியில் உன்னை அது வந்து சேர ..
விழியோரம் பூத்தவளே
என் விழியோடு சேர்ந்தவளே ....

உன் விழிகள் கண்டு மொட்டு
ஒன்று மலர்ந்ததடி ....
கண்மொழிகள் கேட்டு மதி
காலை விழித்ததடி ....
விழியாலே நீ அழைக்க
விழியோரம் நான் சரிக்க
நான்கு கண்கள் சேர்ந்து காதல் செய்ததடி ...
கடலோரக் காற்றைப் போல கரகோசம் நானும் போட
எந்தன் மனம் பொங்கும் அலையானதடி ...

விழியின் வழியாக
காதல் மொழியாக
மலராமல் மலர்ந்ததடி ....
ஹோய் ஹோய் ஹோய்
விழியோரம் பூத்தவளே
என் விழியோடு சேர்ந்தவளே ....

நீ விழிக்கும் நேரத்திலே
பூ மலர கண்டுகொண்டேன் ...
நீ நடக்கும் பாதையிலே
தேன் உதிர்க்கும் பூக்களெல்லாம்...

மழையாக நீயிருக்க
நிலமாக நானிருக்க
எந்தன் மீது காதல் மழை பொழிவாயே ...
விழியாலே என்னை ஈர்த்து
ஔியாக மாற்றி வீண்ணில்
வின்மீனாக உன் அருகே வைத்ததென்ன ...
உந்தன் விழியாலே இன்னும்
என்னனென்ன மாயங்கள் நடந்திடுமோ ...

ஹோய் ஹோய் ஹோய்
விழியோரம் பூத்தவளே
என் விழியோடு சேர்ந்தவளே ....

எழுதியவர் : சிவ அலங்காரம் (16-Feb-17, 3:06 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே