மௌனமான சுவர்கள்
கோவிலினுள் பாவியவர் ஆவியுருக அழுகிறார்
ஏவியவில் அம்புகளாய் ஏராளமாய் விண்ணப்பங்கள்
தமிழறியா கடவுளர்க்கு மொழிபெயர்க்க தூதர்கள்
இருந்தாலும் கற்சிலைகள் மௌனமான சுவர்களாய்...!
பெற்றோரின் நெஞ்சினையும் அற்றுவிட துணிவுத்தரும்
உற்றாரின் உறவினையும் உதறிடவும் வெறியேற்றும்
கற்றோரும் கல்லாத முட்டாளைப் போலாகும்
காதலும் ஒருவகையில் மௌனமான கற்சுவர்தான்..!
குட்டிச்சுவர் மீது வெட்டிக்கதைப் பேச்சு
புட்டிச்சாராயம் முட்டிக் குடிச்சாச்சு
பட்டுத் தெளிகையிலே பாதிகிழவ நாகியாச்சு
மற்றுமொரு இளக்கூட்டம் மௌனச்சுவர் ஏறியாச்சு...!

