நீளமான இரவு
நோயுடன் இருக்கும்
இரவு மட்டும்
ஏனோ நீள்கிறது
முடிவிலியாக..
ஆதவன் வருகை
சீக்கிரம் வர
நிலா விரட்ட
எத்தனிக்கும்
மனம்..
இதை எல்லாம் சரி செய்ய
ஒரே ஒரு
தொடுதல் போதும்
என் அலைபேசியில்
எனக்கான இசை
பிரவாகம் எடுத்து
ஒலிக்கும்..
ஆதவனின் ஒளிக்கு
மாற்றாக
நட்சத்திரங்கள்
சூழ்ந்த இரவில்..