என்னுயிர் தோழிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் - சகி
என் அன்பு தோழிக்கு
முதல்வருட திருமணநாள்
நல்வாழ்த்துக்கள் .....
மனதிற்க்கேற்ற மன்னவனை
கரம்பிடித்தாய் ......
என் அன்பு தோழியே .....
இல்லறவாழ்க்கை என்றுமே
இன்பமாய் அமைந்திட
இறைவனை வேண்டுகிறேன் .....
செல்வங்கள் அனைத்தும்
பெற்று நலமுடன்
திகழ வாழ்த்துகிறேன் ......
ஊர் போற்றும்
கணவன் மனைவியாக
வாழ வாழ்த்துகிறேன் .......
நற்பிள்ளைச் செல்வங்களை
பெற்று வாழ வாழ்த்துகிறேன் .....
அடுத்தாண்டு இன்றைய தினம்
உன் மழலைச் செல்வங்களுடன்
இந்நாளை கொண்டாட இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .......
(என் அன்புத்தோழி ஹேமா அவள் அன்பு காதல் கணவன் கருப்புசாமி இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் )