மாலைப் பொழுது

மாலைப் பொழுது
வானத்துப் பறவைகள் கூட -தன்
துணை தேடி கூட்டிற்குச் செல்லும் பொழுது……..
நான் மட்டும்
இங்குத் தனிமையில்- என்
மன்னவனுக்காக…………….
இந்நேரத்தில்- அந்த
வானத்து மேகமும் என் கண்களும்
ஒரே நிலையில் தான் உள்ளன
என் விழிகள் கருத்த நிலையிலும்
மேகம் இருள் சூழ்ந்த நிலையில்
நான் என்னவனுக்காக
வானம் நிலவுக்காகக் காத்திருக்கிறோம்

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (17-Feb-17, 6:15 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : maalaip pozhuthu
பார்வை : 138

மேலே