பழைய சோறும் பச்சை மிளகாயும் - கிராமியப் பாடல்

பழைய சோத்தக்
கொண்டு வாடி கருப்பாயி
பழங்கதையும் பேசிடலாம்
பக்கத்துல உட்காரு புள்ள
நீயும் கிட்ட வந்து ...!!!


வெறுஞ்சோத்த அள்ளி
உண்ண வெட்டிப் பய
நானில்ல . பச்சை மிளகாவும்
உப்பும் பதமாக வைச்சுக் கொடு
தொட்டுக்கிட்டுத் தின்னுவேன் .


வெயிலுக்கு ஏத்தது புள்ள
குளிர்ச்சியத் தான் தந்திடுமே
தேகத்த சூடாக்க வேண்டாமடி
அத்த மகளே !


களத்துமேடு போறேண்டி புள்ள
காத்திருக்கேன் நீயும் வாடி .
வாய்காலு பக்கத்துல
வகையா உட்காந்து
உச்சிவெயில் வேளையில
உண்ணுவோம் ருசிச்சு ...!!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Feb-17, 3:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே