துவேஷம்

19 /02 /2017
இது
சாதியத்தைப் பற்றிய சுட்டுரை……
எந்த
சாதிக்கும் எதிரான கட்டுரையல்ல…..
உண்மையை மட்டுமே எழுதியுள்ளேன்.
எனக்கிருக்கும் ஏராளமான அனைத்து சமூக நண்பர்களும் என் கருத்தை ஏற்பர் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
- M.பழனிவாசன்.

தி.மு.க - அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பது தவறென்று தமிழக மக்கள் எப்போதுதான் உணர்வார்களோ ? தெரியாது. அதை இங்கே ஆய்வு செய்யப்போவதில்லை. வேறென்ன?
சாதியம் பேசும் ஒரு சாதுர்யக்காரனைப் பற்றி. அது மட்டுமல்ல, சாதியத்தின் பேரில் நடக்கும் அவலங்கள். இதனைப்பற்றியே எழுதுகிறேன்.
தமிழகம் பல விசித்திரத் தலைவர்களைப் பார்த்துள்ளது. அதேபோல் சில விபரீதத் தலைவர்களையும் பார்த்துள்ளது. சட்டமன்றத்திலும் இப்படியே. அவ்வகையில், “தனபால்”. தற்போது சட்டமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிப்பவர்.
” தன் சாதி கீழானது என்பதனால், நமது கட்சிக்காரர்கள் என்னை மதிப்பதில்லை…“ என தன்னடக்கமாகப் போட்டுக் கொடுத்து, ஜெயாவின் இதயத்தில் இடம் பிடித்து, சபாநாயகர் பதவியைப் பற்றிக்கொண்டவர்.
அதன்பின், எதிர்கட்சிக்காரர்களிடம் பிரச்சினை வந்தபோது அதேபோல், ஸ்டண்ட் அடித்து, அதே ஜெயாவிடம் மட்டுமல்ல… ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி அனுதாபம் தேடியவர்.
இப்போது, மீண்டும் அதே சட்டசபையில், அதே காட்சியை, அதேவகையில், அரங்கேற்றினார். இதனை அறிவார்ந்த தமிழ் சமூகம் ஒத்துக்கொள்கிறதா? இது முறையானதா? இதேநிலை தொடருமானால், சமூகம் மேலும் பிளவுபடாதா? இதற்காகத்தான், இவருக்கு வாக்களித்தோமா?
சரி… சாதியக் கொடுமையை நீங்கள் யாரேனும் அனுபவித்திருக்கிறீர்களா? இன்று ஐம்பது வயதைத் தொட்டவர்களுக்கே அத்தகைய நிகழ்வுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், சமூக மார்றம், கால மாற்றம் அத்தகைய வேகமுடன் பயணிக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில, பல நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. இதை சில செய்திகளும் உறுதிபடுத்துகின்றன. ஆனாலும், சாதியரீதியாக மேல்சாதிக்காரர்கள் எனக் கூறிகொள்பவர்கள், கீழ்சாதிக்காரர்கள் என குறிப்பிடப்படுபவர்களை (உண்மையில் பிறப்பினால் அப்படியில்லை) ஒதுக்குவதில்லை.
இன்று சென்னை என்றில்லாமல், தமிழகத்தின் ஏனைய அனைத்து வளர்ந்த மாநகரங்கள், நகரங்கள், வளரும் நகரங்கள், சற்று முன்னேறிய கிராமங்கள் என சாதியம் பரவலாக அறியப்படுவதில்லை. அதனால், சக மனிதர்களை ஒதுக்குவதில்லை. அனைவரும் சமமாகவே நடத்துகின்றனர். பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தபின் இதுதான் உண்மை. இதேபோல் கலப்புத்திருமணம்கூட, அரசியல் குறுக்கீடுகள் இல்லையெனில் வெற்றிகரமாக நடந்தேறுகின்றன. இதுவும் மறுக்க முடியாத உண்மை.
கல்வி, அரசியல், அரசு மற்றும் பிற தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கீடுகள், உரிமைகள் அனைத்தும் தாராளமாக தரப்பட்டு, சட்டரீதியாக பாதுகாப்பும் தரப்பட்டு, தலைநிமிர்ந்து அவர்கள் கெளரவமான வாழ்வியலைத் தொடர்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், அவர்களின் நல்ல, தரமான வாழ்க்கையைப் பார்த்து, முன்னேறிய பிரிவினர்கள் என சுட்டிக்காட்டப்படுபவர்களே ஏக்கப்பெருமூச்சுவிட்டு, தங்கள் வாழ்க்கை விடியாமலிருப்பதை எண்ணி எண்ணி விம்முகிறார்கள். என்றோ ஒரு தலைமுறை தவறு செய்ததற்காக, அதன் சந்ததியினர் இன்று சாப்பாட்டிற்கே லாட்டரி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை நிதர்சனமான உண்மை.
ஆனால், தாழ்த்தப்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இன்று நன்கு படித்த இளைஞர்கள், இளைஞிகளே. அறிவால், சுயத்தன்மையால் முன்னேறியவர்களே. தாழ்வுமனப்பான்மையிலிருந்து வெளிவந்து சாதிக்கத் துடித்து, அதன்படியே செய்துவருகிறார்கள். பல சமூகப் பிரிவினர்களுடன் பழகி, அவர்கள் இல்லங்கள் வரை நெருங்கி, இரண்டறக்கலந்து பழகுபவர்களே. சமூக மாற்றங்களைக் கண்ணுறும் ஆர்வலர்கள் இதனை நன்குணர்வர்.
சரி.. விஷயத்திற்கு வருவோம். மேற்கூறிய அனைத்தையும் பொய்யாக்கி, அடிமைத்தனத்தில் தனது இனம் உழல்வதுபோல், மாயத்தோற்றத்தை உருவாக்கி, தன் இனத்தாருக்கு பழங்கதைகள் மூலம் துவேஷத்தை ஊட்டி, வன்மச்சிந்தனையை வேரூன்றச் செய்து, அதன்மூலம் தங்களுக்கென வட்டார ரீதியிலாக, தன் இனத்தாரிடம் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துக்கொண்டு, பெரிய கட்சிகளிடம் பேரத்தின் மூலம், ஜனநாயகத்தை விலைபேசி வியாபாரம் செய்யும் இவர்கள் சார்ந்த சாதிக்கட்சிகளை என்னவென்று சொல்வது?
கற்றறிந்த இச்சமூகமக்கள் ஏன் இன்னுமிவர்களை நம்புகிறார்கள்? அப்படியானால், அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? இன்னும் இவர்கள் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்? மேல்சதிக்காரர்கள் எனக்கூறப்படுவோரெல்லாம் இவர்களிடம் மண்டியிட்டு பிச்சைகேட்டு, அலைய வேண்டும், அண்டிப்பிழைக்க முடியாமல் சாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா? ஆம் எனில் பிறகெப்படி சமத்துவ சமூகம் மலரும்? மேல்தட்டு சமூகம் எனக் கூறப்படுபவர்கள் மாறினாலும், கீழ்தட்டு சமூகம் எனக் கூறப்படுபவர்கள் தங்களைப் பிரித்துக்கொண்டு செல்வது ஏன்?
சாதி ஒழிப்பு மாநாடு நடத்துகிறேன் என சாதியை மேலும் வளர்க்கவே இத்தகையத் தலைவர்கள் உழைக்கிறார்கள். தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே செல்வாக்கு பெற்று, அவர்கள் வாக்குவங்கியைத் தக்க வைத்துக்கொண்டு, வலம் வந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள். பின் திராவிடக்கட்சிகளின் கோலோச்சுமையால் கம்யூனிஸ்டுகள் ஆட்டம் கண்டனர். இப்பிரிவினரில் தங்கள் வாக்குவங்கி அரசியலைவைத்து வளம் காண ஆசைப்பட்டவர்கள் அடுத்து தங்களது வியாபாரத்தின் பிராண்டாக தேர்ந்தெடுத்தது “டாக்டர். அம்பேத்கர் ” அவர்களை.
உண்மையில், அம்பேத்கர், கட்டைப்பஞ்சாயத்து செய்தவரில்லை, கறுப்புப்பணம் சேர்த்தவரில்லை. தேசியத்திற்கெதிராகப் பேசியவரில்லை. இந்துக்களுக்கு எதிராகப் பேசியிருக்கலாம். ஆனால், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதில்லை. அவர் மதம் மாறியிருக்கலாம்… ஆனால், அது கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் என தழுவவில்லை. ஒரு இந்தியத்தோன்றலான பெளத்தத்தையே தேர்ந்தெடுத்தார். இதுதான் உண்மை வரலாறு. தனது கட்சிக்கு காசு சேர்க்கவில்லை. ஆனால், இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக வாழ்வதாக கூறுபவர்கலெல்லாம் இப்படி வாழ்கிறார்களா? அவர்கள் மனசாட்சி பதில் கூறட்டும்.

இதே தமிழகத்தில், வைணவப்பிரிவினைச் சார்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தோன்றி, அவர்கள் நலனுக்காக வாழ்நாளின் இறுதிவரைப்போராடிய தமிழக தலித் “சுவாமி சகஜானந்தா” (சுவாமி சகஜானந்தா (Swami Sahajananda) (பி ஜனவரி 27 1890 - மே 1 1959) இவர் ஓரு ஆன்மிகவாதி , சமூக சேவகர் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார் 1926-32, 1936_47 ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமேலவை நியமன உறுப்பினராகவும், 1947, 1952, 1957 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.) அவர்களை எளிதாக மறைத்து, மறந்துவிட்டு, அம்பேத்கரை உயர்த்திப்பிடிப்பது, வெறும் பாசத்தினால் அல்ல. காரணம், சுவாமி சகஜானந்தா ஒரு இந்து.
தனது மதப்பிரிவின் சின்னத்தை எப்போதும் தரித்தவர். அதனால், அவர் புறக்கணிக்கப்பட்டார்.
பகுத்தறிவுப் போர்வையில், கப்பல் மற்றும் குதிரைகளில் வந்து அடிமைப்படுத்திய மதங்களை அனுசரிக்கவும், திட்டமிட்டு இச்செயல்களை அரங்கேற்றினர். (ஆக, எங்கு சுற்றினாலும் மதமாற்றக்கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதைப்பற்றிப் பிறகு பார்க்கலாம்.)
ஒரு சாதிக்காரன் கட்சி நடத்திக்கொண்டே இன்னொரு சாதிக்கட்சியைப் பார்த்து சாதிக்கட்சி என இகழலாகாது. உண்மையில் சாதியத்தை ஒழிக்கிறேன் என முடிவெடுத்தால், முதலில் இவர்களது (இரு பிரிவினருமே) கட்சிகளைக் கலைக்கட்டும். இதுவே சமூக அக்கறை.
இப்படியெல்லாம் இருக்க, சபாநாயகர் தனபால் இன்னமும் சாதியப் போர்வையில் ஜனநாயகத்திற்கெதிரான தனது குள்ளநரித்தனத்தைக் காட்டியுள்ளார். இதுதானா இத்தனை நாள் இவருக்கு அரவணைப்பாக இருந்த அனைவருக்கும் காட்டும் நாகரீகப் பண்பு, பாசம்?
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை நம்பினால் அவர்சார்ந்த சமூகம் நாசமாகத்தானே செய்யும். தனது பிறப்பால், அரசியல் ரீதியாக தனக்குக்கிடைத்த அங்கீகாரத்தை, இவர்சாராத சமூகத்திற்கெதிராகத் திருப்பினால், இதனால், துவேஷமும் வன்மமும்தானே பெருக்கெடுக்கும்?
சாதிய மோதல்கள்தானே உருவெடுக்கும்? அதைத்தான் இவர் விரும்புகிறாரா?
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி திசைதிருப்பும் அரசியல் நடக்கும்?
சட்டசபைக் குறிப்புகளில் இவர் பேசிப் பதிவானது, இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பிறகும் துவேஷத்தைக் கிளப்புமே… அது இன்றைய தலைமுறைக்கு அவமானமில்லையா?
காமராஜர் அமைச்சரவையில் உள்துறை, பொதுப்பணித்துறை, விவசாயத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அமரர்.“கக்கன்” அவர்கள் கூட தாழ்த்தப்பட்டப் பிரிவில் தோன்றியவர்தான். அவரை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லையா?
அவர் காலத்தில் உருவான மேட்டூர், வைகை அணைகளை வேண்டாமென இடித்துத்தள்ளினோமா?
இன்றும் அவரை அனைத்து சமூகத்தினரும் அவரைப் போற்றுகின்றனர். ஆனால், அவர் சார்ந்த சமூகத்தின் தலைவர்கள் அவருக்கு விழாவெடுப்பதில்லை. காரணம், அவர் ஒரு தேசியவாதி. குறிப்பாக காங்கிரஸ்காரர்.
அந்த கக்கன் அவர்கள் தனது பணிகளைச் செய்தபோது எந்த இடத்திலும் தனது சாதியைக் கேடயமகப் பயன்படுத்தியதில்லை.
அவர் தம் அப்பழுக்கற்ற உழைப்பால், இன்றும் போற்றப்படுகிறார். அதிகமான சாதிய துவேஷமும், கல்வியறிவில்லாமையும் கரைபுரண்டோடிய அக்காலத்திலேயே “கக்கன்” கெளரமாகப் சேவையாற்றினார்.
இக்காலத்தில் முடியாதா?
ஆக, கீழ்தரமான அரசியல் விளையாட்டில் வாக்குவங்கி அரசியலே, சமூகத்தைப் பிரித்தாள்கிறது என்பது புலனாகிறது.
ஆகவே முதலில் தனபால் எனும் சாதியம் பேசும் செயலை கைவிடவேண்டும். சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது குறித்து அனைத்து சமூக தலைமுறைகளும் அறிவுத் தெளிவுறல் வேண்டும்.

எழுதியவர் : M.பழனிவாசன். (19-Feb-17, 2:13 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே