அவனும்-அவளும்
அவனும்-அவளும்!
அவன்!
காத்திருந்தது கண்கள்
பாத்திருந்தது வழியை
நேரமாச்சி உனக்கு
நெஞ்சி வலிச்சது எனக்கு
தாமதம் உனக்கு பழக்கம்
ஜாதகத்திலும் உனக்கு இருக்கும்
பத்தாம் மாதம் பிறக்காமல்
பதினோராம் மாதம் பிறந்தாயா?
பொத்துகிட்டு வருதே கோபம்
பொழுதை வீணாக்குவதும் பாவம்!
அவள்!
பொறுமைகெட்ட மடையா
பொறுப்பா நினைக்க தோணலையா?
எறும்பு ஊர கல்லும் தேயும்
எடுத்துச் சொல்லும் விதத்தில் மனசும் இளகும்
ஆக்க பொறுத்தவனே ஆற பொறுக்கனுமடா
வெந்தது போதுமின்னு முந்தியில் தட்டுறதுக்கு
திங்கிற சோறுஇல்ல திண்டாடுற வாழ்க்கையடா
திட்டமிட்ட வாழ்க்கையே
தெவிட்டாத இன்பமடா!