ஜாதிய எலிகள்

இச்சாதி என்பார்,
அச்சாதி என்பார்...
இச்சாதியில் இழிவுகள் கோடி என்றிழிப்பார்....

பகைமை உறைப்பார்,
பதுங்கிச் சிரிப்பார்..

கண்ணில்,அறிவில்
குஸ்டங்கள் கொண்டார்..

மட மனித மந்தையரே கேளீர்...
தோன்றுமுயிர் பிறப்பினில் இழிவென்பது என்றுமில்லை...

நிறமொன்று,சுகமொன்று எவர்க்குமோர் நிஜமுண்டு...

நீவீர் நேற்றை போலே,
பெரும் பொய்யின் மடியில் வெந்து முடியாதீர்...

சொல்வேன் கோடி முறை,
பிறப்பினில் இழிவில்லை....

-சங்கர் சிவக்குமார்

எழுதியவர் : சிவசங்கர்.சி (25-Feb-17, 1:19 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 748

மேலே