உண்மையான அரசியல்
வெள்ளை ஆடையணிந்த கொள்ளையடிக்கும் குணமுடைய அரசியல்வாதிகளே...
உண்மையான அரசியல் அறியுங்களே....
கட்சியும், கொடியும், கொள்கையும் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல...
ஒரு கட்சியைப் பின்பற்ற வேண்டுமெனில் அக்கட்சியின் கொள்கைகள் மிகச் சரியானவையாக மக்களுக்குரியவைகளாக இருக்க வேண்டியதும் அவசியமே....
அறிஞர் அண்ணாவின் பெயரைச் சொல்லி கலைஞர் மற்றும் எம்.ஜி.யார் அவர்களும்,
எம்.ஜி.யாரின் பெயரைச் சொல்லி அரசி பவளவல்லியான செல்வி ஜெயலலிதா அவர்களும்,
தற்போது செல்வி ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஏடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அவர்களும் மக்களால் என்றும் மறக்க முடியாத சான்றுகள், காலம் காலமாக மக்களை இந்த அரசியல்வாதிகள் எவ்வாறு ஏமாற்றி வருகிறார்களென்பதற்கு....
நீங்களொன்றை அறிவீர்களா???...
பழைய தலைவர்களை பெயரை உச்சரிப்பதால், அவர்களின் கொள்கைகளை, உயர்குணங்களைப் பின்பற்றுவோராக இருப்பார்களென்று எப்படி நம்ப முடியும்???...
அப்படியே நம்ப முடியுமென்று நீங்கள் கூறினால், காந்தியென்ற பெயரால் அழைக்கப்படும் எல்லோரும் காந்தியாக வாழ்ந்துவிடுவார்களென்பதை ஏற்றுக்கொள்வீர்களா???...
சற்றே சிந்தித்துப்பாருங்களே...
நல்லவர் போல் வேடமிடாதீர்களே...
காலில் விழாதீர்களே...
மரியாதையென்பது சுய மரியாதையோடு, பிறருக்கு தனக்கு நிகரான மரியாதை கொடுத்து நடந்துகொள்வதே....
முடிந்தவரை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து வாழுங்களே...
அவ்வாறு வாழ்ந்தால் தானே மக்களின் அடிப்படைக் குறைகளை உணர்ந்து நிவர்த்தி செய்தல் சாத்தியமாகுமே....
எப்போது மேலோட்டமாகவே சிந்திக்காமல் அடித்தளம் வரை ஆழமாகச் சிந்தியுங்களே...
மக்களே உங்களுடைய எஜமானர்கள்...
எஜமானர்களை விலைவாங்கி வெற்றி பெறுவதும், ஆட்சி அமைத்துக் கொள்ளையடிப்பதும் அரசியல் அல்ல....
ஊராட்சித் தலைவர் முதல் பிரதமர் வரை இன்றைய நடைமுறையில் உண்மையான அரசியல்வாதியென எவரும் இல்லையென்பது இந்தியாவின் அவலநிலையே....