ஆம் இதற்கு பேர்தான் காதல்
ஆம் இதற்கு பேர்தான் காதல்
உன்னழகை நானும் என்னழகை நீயும்
உன் நண்பர்களிடம் நீயும்
என் நட்புக்களிடம் நானும்
பெருமை பேசிக் கொள்ளத்தான்
இளம் வயிற்றுப் பசியாற வாயுடன் வாயிணைத்து
முடிவில் வயிற்றை நிரப்பி
வேண்டாமென சிசுவைக் கொன்று
என்னை நீயும் உன்னை நானும் வெறுத்து
உன்னுலகத்தில் நானும் என்னுலகத்தில் நீயும்
தவறாக சித்தரிக்கப்பட்டு அல்ல சித்தரித்து
மீண்டும் ஒரு துணை தேடி
என்னை வைத்து நீயும்
உன்னை வைத்து நானும்
அனுதாபம் தேடி
மீண்டும் அமுதவாய்ச் சுவைக்க கட்டிலில் விழுவோம்
தனித்தனி துணையோடு.......................
உதய் Ud