ஜல்லிக்கட்டு

திமிர் கொண்ட காளையை
திமில் பிடித்து அடக்குவேன்
கொம்புகிழித்த காயங்கள்
என் தோல் சுமக்கும் பதக்கங்கள்

கட்டில் கடிகாரம் வேட்டி என
பரிசுகள் பல பெற்றிடுவேன்
அதைவிட பெரிய பரிசுடனே
அத்தை மகளும் காத்திருப்பாள்

அவள் முத்தம் பதிப்பாள் எனத்தெரிந்திருந்தால்
இன்னும் மூவாயிரம்
காளைகள் பிடித்திருப்பேன்.

எழுதியவர் : அ.வீரபாண்டியன் . (25-Feb-17, 3:48 pm)
சேர்த்தது : அ வீரபாண்டியன்
Tanglish : jallikkattu
பார்வை : 93

மேலே