கவிதையே நீயடி

கவிதை எழுத ஆசை
காதலியே
நீ வா
உன் மைவிழியில்
மை எடுத்து,
பூ இதழில்
வரி எடுத்து,
கன்னத்தில்
இளம் பரு முற்று எடுத்து,
கரங்களிலே
பருவ முடி தூரிகை எடுத்து,
கவிதை எழுத முற்பட்டேன்
காகிதம் இல்லை,
கன்னத்தை தா.
சற்றே,
கை ஓய்வெடுக்க,
இடையினை தா.
எழுதிய கவிதை
எங்கே
இடையினில் மறந்தேன்,
மீண்டும் வா .