நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா
நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா
====================================================
இயற்கையின் குருட்டிற்கு
ஒரு நிமிட வரம் அது,
காதல் போன தெரு அது
தெரியாமலேயே நடந்தேன் போல்,
பார்வை அருகி
பந்துபோல் புறப்பட்ட இடத்தே
திருச்சேறும் தூரம் தான் அது எனக்கு,
இறந்தகாலத்தின்
இளவேனிற்காலம் அது,
கனவுகள் தனிமைத் திருடியபோது,
கவிதைகள் கற்பனைத் திருடின,
அந்த உறக்கம்,
அற்பநேரந்தான்
கண்களைத் திறந்தபோது
யுகங்கள் தவமிருக்கும் ஞானிபோல பயணத்தில்
யாருமில்லாததைப்போல,
காட்சியில் விழுந்த கருணை அது,
பூத்துக்குலுங்கியது
பூக்காலம் மட்டுமல்ல,
அகந்தோறும் வினாடிகளைப்போல
இதயம் துடிக்கும்
ஆசை மகரந்தங்களை
வளர்த்துக் கொண்டிருக்கிறாய் வேதியலே,
போதிமரங்களோ புத்தனோ
பொறுமையிழக்கும் போர்க்களம்
இலை ஏறிய எறும்புபோல்,
இந்த பயணம்
ஏன் இப்படி சுகமாக கனக்கிறது,?
அறியாமல் கூட
சோம்பல் முறிக்க எத்தனித்தாலே
விரல்களில் நான்கைந்து
விழும் கூந்தல் தொடுமே,
காக்கைப் பழங்களை,,
காகிதச் சுருட்களை,
கற்கள் சிறு கூட்டத்தை,
கையிலேந்தி எதைநோக்கி,,
ஏதும் செய்யாமல் எல்லாம் கொள்ளை,
என்னையும் கொண்டுப்போ என்கிற
வழிமாறிய நிமித்தவயது
பயணம் அறையும் காற்று பிடிக்குமென்றுத் தெரிந்தபோது,
காற்று எதிரி ஆனது,
கவிக்கு முரண் கொடுத்தது,
சரியும் கூந்தலை திசைத்திருப்பி,
மோதலை ஏற்படுத்திவிடும்போதெல்லாம்
அரண் வைக்கத்தோற்கிறேன்,
ஆரவாரங்கள்
ஒட்சையேதுமின்றி
கைக்கொட்டிச்சிரிக்கின்றன.
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
பிழைகளை
யாரும் பார்த்துவிடக்கூடாதே,
காட்சி திருடனாக்கி,
நிமிடங்களை அள்ளி எடுக்கத் துணிந்தபோது
எல்லாம் இழந்திருந்தேன்... கண்களிரண்டை
மூக்கு நுனி நிறுத்தி,
நித்திரைவரம் பெறும் மனோதத்துவம்,
காலோச்சையோடு உதடுக்கடித்து
தலை சாய்ந்து,
சிறைப்போன நொடிகளை எழச்செய்யலாமா, ?
கற்களோ காகிதக் கூழோக் கைச்சேருமா??
என் அக்கம்பக்கம் துழாவுகிறேன்,,
நேசிக்கின்ற இதயம் வேண்டாம்,
திருடிச்சென்ற விழிகள் தா.
"பூக்காரன் கவிதைகள்"

