மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்ணாய் உரு கொண்டு
மண்ணில் வலம் வந்தாள்
புன்சிரிப்பால் புதல்வி ஆகி
சண்டையிட்டு சகோதரியாகி
தோள் சாய தோழியாகி
காதல் வயப்பட்டு காதலியாகி
அவனே கைப்பற்ற மனையாளாகி
பிள்ளைகள் பெற்று தாயாகி
என்றும் பிள்ளைகளுக்கு தூணாகி
மருமகள்/ மகன் பெற்று மாமியாராகி
பேரப்பிள்ளைகளால் மீண்டும் மழலையாகி
நிற்காமல் ஓடும் நதியாகி
வாழ்வை ரசிக்கும் பெண்ணே
வழவழ மேனி மாரி
சுருக்கங்கள் மெல்ல சேர்ந்து
நரைகள் ஓவென்றக தோன்றி
முதுமை முத்தமிட்டும் மின்னட்டும்
மேலும் மேலும் ஒளிரட்டும்
உன்னில் உள்ள பெண்மை
பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

