தாய்மையின் அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்
சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்
சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்
வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது
அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்
கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.