கேட்பது பொய்
மார்கழிக்குளிரில்
நடுங்கிக்கொண்டிருந்த
புற்களுக்கு
பனித்துளிகள்
போர்வைகளாகின !
கோடைவெயிலில்
கொளுத்தும் அணலில்
தீக்குச்சிகளுக்கு
தீக்குச்சிமருந்துகள்
தொப்பிகளாகின !
பிள்ளையார் கோவில்
தேங்காய்க்கு
கொட்டாங்குச்சிகள்
தலைக்கவசமாகின !
பாலைவன
பயணத்தில்
பசியின் தாகத்தில்
பாம்பின் விஷங்கள்
தாகம் தனித்தன !
துள்ளும் மீன்களுக்கு
தூண்டில்முட்கள்
பல்குத்தும்
குச்சிகளாகின
முடமான புறாக்களுக்கு
வேடனின் அம்புகள்
கைத்தடிகளாக
கைகொடுத்தன
அது போலத்தான் அன்பே
நீ என்னை
வேண்டாம் என்றது
இவுலகில் என்னைத்தவிர
யாரும் வேண்டாம்
என்றது போல்
என் காதில் விழுந்தன!