வலிகள்

வலிகள் தாங்கும் இதயம்
தான் சாதனைகளை
தாங்கும்...
வலிகளை மறக்கடிக்க
கடவுள் எனும் மருத்துவன்
கொடுக்கும் மருந்து
தான் சாதனை...
வலிகளின் வடுதான்
கசப்பான நினைவுகள்...
கசப்பான நினைவுகளை
கூட சிந்தித்து பார்க்கையில்
புன்னகை சிந்த தூண்டுமே
அவனே சாதனையாளன்...