தெரிந்து கொள்வோம்

ஆங்கிலேயர்களை எதிர்த்து 1857 ஆண்டு மே 10 தேதி அன்று மீரட் என்கிற நகரில் போராட்டம் நடந்தது. அது தான் இந்தியாவில் நடந்த முதல் போராட்டம் என்கிறது வரலாறு ஆனால் அதற்கு முன்னரே தமிழ் நாட்டில் வேலூர் என்கிற நகரில் 10-07-1806 அன்று வேலூர் கோட்டையில் போராட்டம் நடந்தது என்பது பல பேருக்கு தெரியாது. அந்நேரத்தில் வேலூர் கோட்டையில் திப்பு சுல்தானின் குடும்பம் சிறையில் இருந்தது.

வேலூரில் நடந்த போராட்டம் வரலாற்றில் பதிவாகவில்லை. வேலூரில் நடந்த போராட்டம் வேலூர் சிப்பாய் புரட்சி என்று கூறப்படும்.

ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களுக்கு சில புது உத்தரவுகளை பிறப்பித்தார்கள். அது என்னவென்றால் இந்திய சிப்பாய்கள் திருநீறு இடக்கூடாது, காதுகளில் கடுக்கன் அணியக்கூடாது மற்றும் விலங்கு தோல்களிலான தொப்பியை அணிய வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இது சிப்பாய்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனவே சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலை ஆரம்பித்த சில மணி நேரங்களிலையே போராட்டம் சிப்பாய்களுக்கு சாதகமாக அமைந்தது. அந்நேரத்தில் திப்பு சுல்தானின் மகன் சிறையில் இருந்து விடுவிக்க பட்டான். ஆங்கிலேயர் கோடியை கீழே இறக்கி திப்பு சுல்தான் கோடியை பறக்க வைத்தான். ஆனால் ஆங்கிலேயர்கள் வெளி ஊர்களில் இருந்து அதிகமாக சிப்பாய்களை வர வைத்தார்கள். அதனால் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த போராட்டம் சுமார் 8 மணி நேரம் நடைப்பெற்றது.

1857 இல் நடந்த கிளர்ச்சியிலும் சிப்பாய்கள் தோல்வி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் நடந்த புரட்சி வரலாற்றில் பதிவாகவில்லை அதனால் 1857 இல் நடந்த போராட்டம் முதல் போராட்டம் என்று கூற பட்டது.

இது மட்டும் இல்லாமல் வேலூரை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது.
........

உங்கள் அனைவருக்கும் ஊட்டியை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் ஏழைகளின் ஊட்டியை பற்றி தெரிந்திருக்காது. அது தான் ஏலகிரி. இது வேலூரில் இருக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்று அன்போடு அழைக்க படுகிறது நம் ஏலகிரி.
.........

இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் மட்டும் தான் தங்க கோவில் இருக்கிறது. ஒன்று பஞ்சாபில் உள்ளது மற்றோண்டு வேலூரில் உள்ளது என்று தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கே தெரியாது.
.......

ஐடா ஸ்கடடேர்(ida scudder) என்கிற ஒரு ஆங்கிலேய பெண் ஒரு முறை தன் பெற்றோர்களை காண வேலூருக்கு வந்தால். அப்போது உரிய மருத்துவ வசதி இல்லாததால் கர்பிணி பெண் இறந்து விட்டார். இதை பார்த்த ஐடா நியூ யார்க் சென்று மருத்துவ படிப்பை முடித்து வேலூருக்கு வந்து ஒரு மருத்துவமனை ஆரம்பித்தார். அது தான் இந்தியாவிளையே பிரபலமான சி.எம்.சி மருத்துவமனை.
......

உலகதில்லையே இரண்டே இரண்டு ஊரிசு கல்லூரி மட்டும் தான் உள்ளது. அதில் ஒன்று கலிபோர்னியாவில் உள்ளது. மற்றோண்டு வேலூரில் உள்ளது. இது கல்லூரிகள் ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரிசால்(Ralph and Elizabath Voorhees) நிறுவப்பட்டது.

நமக்கு தெரியாமல் ஒரு ஊரிலையே இதனை சிறப்பம்சம் இருக்கிறது என்றால். கண்டிப்பாக மற்ற ஊர்களிலும் நிறைய சிறப்புகள் இருக்கும். அதை நாம் தான் ஆராய்ந்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இனியாவது வருங்கால சந்ததியர்களுக்கு நம் வரலாறை சொல்லி கொடுங்கள்.

எழுதியவர் : சரவணன் (11-Mar-17, 11:13 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 618

சிறந்த கட்டுரைகள்

மேலே