சலாவு55கவிதைகள்
வேண்டும் வேண்டும் பெண்ணே .
மீண்டும் நான் நானாய் வேண்டும் ..
அனுதினம் உனக்குள் தொலைந்தது போதும் ..
வேண்டும் வேண்டும் பெண்ணே ..
கடல் பொங்கி அழுதாலும் ..
காற்று மழை பொழிந்தாலும் ..
கன்னியே நம் காதலையே ..
தடுத்திட தான் முடிந்திடுமா ..
தனிலையை நான் மறந்தாலும் ..
உன் பாதத்திலே விழுந்தாலும் ..
ஏக்கங்கள் தான் பாரமாச்சு ..
சோக சுமை கூடிபோச்சு ..
வேண்டும் வேண்டும் பெண்ணே ..
மனம் மாறித்தான் நீ போயிட்டியே ..
தடம் மாறி நான் போகலையே ..
தாங்கிக்கொள்ள துடித்தேனே ..
துயர் துடைக்க முடிவேடுத்தேனே ..
உயிர் உருக செவிமடுத்தேனே ..
பாச அன்பினையே வடித்தேனே ..
பிரிவொன்றே நிலையென்றால் ..
என் மனம்தான் தாங்கிடுமா சொல் ..
வேண்டும் வேண்டும் பெண்ணே ..
மீண்டும் நான் நானாய் வேண்டும் ..
அனுதினம் உனக்குள் தொலைந்தது போதும் ..
வேண்டும் வேண்டும் பெண்ணே ...

