நிலவே
நிலாவே
பெண்மையாக கவிஞன்
மனதில்நீ
அன்னை சோறுட்ட
தன் பிள்ளைக்கு கவியமாய் உன்னைகாட்டுவாள்..
விஞ்ஞானி உன் மேல் ராக்கட்
செலுத்தியே ஆராய
ஆசைப்படுவான்
பௌர்னமி நிலவாய் நீ வீச
பெண்மைக்கு பெறுமை
உன்னால் மட்டும்...
இரவில்
உன் மென்மையை ரசிக்காத
உயிர்கள் உண்டோ
நிலவின் மடியில்
துயில் கொள்ளும்
உயிர்கள் எத்தனை எத்தனை
இரவில் பூமிக்கு ஒளி உன்னால்
நிலவே உன் அழகை ரசிக்காத
உயிர்கள் எங்கே
நிலாவே நீங்காமல் நின்றுவிட்டாய்
கவிஞன் மனதில் இருந்து
என்றுமே கவிஞனுக்கு நீயே விருந்து..
சிவனின் தலையில் இடம்
பிடித்து பிறைநிலவானாய்
பிறர் வணங்கும் அளவுக்கு பெண்மைக்கு
பெருமை சேர்த்தாய்..
நிலவே உன்மடியில் உறங்க
ஆசை
நிலவொளியில் கதைபேசிய
நாட்க்களை வாழ்வில் ரசிக்க
மீண்டும் திகட்டாத உன் பயணத்தில்
எத்தனை நடைகள்....

