உதயம்

அதோ..!!
என் இதயம் தொட்டவனின் உதயம்..!!
ஓடி வந்து உன்னிடம் பேசும்
துணிவிழந்துவிட்டேனடா!!

என நலம் வினவும் உன்னிடம்
என்னவென்று விவரிப்பேன்..!!
என் மொழி ஊமையாகி
விழி பேசும் மொழியை
நீ விரும்பமாட்டாய் என நான் அறிவேன்..!!

துவண்டு போன என் இதயத்தை
தூக்கிலிட்டுச் செல்வாய் என தெரிந்தும் உனை
நான் எப்படி எதிர்கொள்ள..!!

என் கண்களும், கால்களும்
என் கட்டுப்பாட்டை இழக்காமல்
உன்னை கடந்து இழுத்துச்சென்ற நேரம்...!!!

அய்யோ!!!
இதனினும் வேறென்ன வேதனை இருக்க கூடும்?
எத்தனை கொடுமைக்காரன் இந்த இறைவன்...!!!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (13-Mar-17, 4:47 pm)
பார்வை : 173

மேலே