விழியே விழியே
'வாய்' போன்ற விழிகளின்
'இதழ்' போன்ற இமைகளை
இமைத்து வார்த்தைகளற்ற,
ஆயிரமாயிரம் மௌனமொழிகளை
பேசும் நம் உயிரின்
'வாசல்' தானே நம் விழிகள்!!!!!????
உலகின் எழிலையும்;
உயிர்களின் படைப்புகளையும்;
அனைத்து விதமான உணர்வுகளையும்
தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கும்
'புதையல்' தானே நம் விழிகள்!!!!!????
"காதலுக்கு கண் இல்லை என்பார்கள் "--பொய்;
காதலின் ஆரம்பமே நம் விழிகள் தானே!!!!!????