நினைவுகள்
காலம் கடந்தால் காதலும் கடந்து செல்லும் என்றார் பலர்....
நாட்கள் நகர்ந்தாலும் உன் நினைவுகள் நகரவில்லை என்றுணர்ந்தேன் நான்.
உன்னை விட்டுச்சென்றால்,
உன் மீது கொண்ட காதலையும் விட்டுச்சென்றிடலாம் என்று எண்ணிய கடந்த காலத்தை எண்ணி நகைக்கிறது
எந்தன் நிகழ்காலம்...
உன்னைத் தொலைக்க முடிந்த என்னால்,
உன் நினைவுகளை தொலைக்க முடியவில்லை...
உன்னைச் சேரும் வழி இனி இல்லை என்றரிந்தும்,
உன்னை நினைக்க மனம் தயங்க வில்லை....
எல்லாம் கால போக்கில் பழகிவிடும் என்றார் சிலர்...
உண்மை தான்...
இன்றும் என் அழைபேசி அழைத்தால்,
நீயாக இருப்பாயோ என்று ஆவலோடு
கையில் எடுத்து ஏமார்ந்து போகும் பழக்கம் பழகிவிட்டது...
நாள் முழுக்க ஓயாமல் செய்ய வேலை இருப்பினும்,
கண்ணிமைக்கும் பொழுதேனும் உன்னை நினைக்க மனம் மறந்ததில்லை...
உன்னை நான் நினைக்கும் தருணத்தில்,
நுண்ணுணரவு(telepathy) வழியாக,
என்னை நீயும் நினைப்பாயோ?..
என்றெல்லாம் எண்ணி அறிவியலையும் கொலை செய்கிறேன்...
காயம் மட்டுமில்லை,
மாயமும் செய்யும் காதல்
எனறரிந்தேன்...
ஏனெனில்,
எழுத்து பிழையின்றி ஒரு வாசகமும்
எழுத தெரியாத என்னையும் கவிதை வடிவில் பிதற்ற வைத்தது நம் காதல்...
நம் காதலா? என்று கேட்காதே..
உனக்கு அது நட்பாக இருப்பினும்,
நான் கொண்டது காதலே.
முற்றுப்புள்ளி வைத்தவள் நீ தானே,.. பிறகென்ன காதல்?.. என்று நினையாதே..
உரவோ, உருவமோ தேவையில்லை..
உன் நினைவுகள் ஒன்றே போதும்
என் ஒரு தலை காதலுக்கு..
என்றேனும் ஓர் நாள்,
கனவுகள் வெறுத்து,
உன் நினைவுகள் அறுத்து,
உன் பெயரை மறந்து..
நான் எனக்காக வாழ்வேன்
என்று நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன்..