என் இதயம்

அச்சப்படுகிறேன்
ஏதாவது ஆகிவிடுமோவென
என்னுள் இருக்கும்
உன்னிதயத்துக்கு
பச்சைக்கிளி சபதம்
பொல்லாதது
திருடிய அதரத்தை
அதனிடமே
திருப்பிக் கொடுத்து விடு
முல்லையை
இடையில் வைத்து
ஆடை மறைப்பு
செய்யாதே
அதிக நேரம்
உன்னிடை தாங்காது
உடைந்து விடும்
உடைந்தால்
என்னிதயம்
நொறுங்கிவிடும்
ஆக்கம்
அஷ்ரப் அலி