தேவதை

அமாவாசை இருளிலும்
முழுமதியின் ஒளியாய்!
பளிங்கு சிலையென!
எல்லோரா ஓவியம்போல்!
இருக்கும் உன் வருகையால்
சித்திரை வெய்யிலும்
மார்கழி குளிரானது...

பகலவன் பார்வைபட
தென்றல் தட்டியெழுப்ப
துயில் களைந்த மொட்டுகள்
தன்உடலெனும்இதழ்களை விரித்து
பனித்துளிகளில் நீராடி
சோலைவனத்தில் இருக்கும் தன்சக
தோழிகளெனும் மலர்களிடம்
பரஸ்பரம் ஸ்நேகப் புன்னகை பூத்தது..

அச்சோலைவனத்தை அலங்கரித்த மலர்களையே...
பூச்சேலை கட்டிய மங்கையின்
கார்மேகக் கூந்தல் அலங்கரித்தது...
இவ்வளவு பேரழகின் அம்சம் கொண்ட
நீ என்ன தேவதை வம்சமோ!!!??

எழுதியவர் : உமா (29-Mar-17, 9:12 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : thevathai
பார்வை : 219

மேலே