கவிதையே உனக்கொரு கவிதை

காலில் கொலுசு அணிந்து கவிதைச் சந்தத்தில் நடக்கிறாய்
பாலில் உருளும் கருந்திராட்சை போல்விழியினை மெல்ல உருட்டுகிறாய்
கவிதை நெஞ்சில் புன்னகைப் பூக்களை பூமழையாய் சொறிகிறாய்
கவிதையே உனக்கொரு கவிதை யைநான் எப்படிப் பாடுவேன் !
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .
----கவின் சாரலன்