உலகம் உன்கையில் --- புதுக்கவிதை

உலகம் உன்கையில் --- புதுக்கவிதை



உலகமது கைகளிலே
இருந்தாலும் உருவாக்கம்
என்பதுதான் உன்னிடமே !
பலர்சேர்ந்து அரவணைக்க
எந்நாளும் பக்கமாக
வந்திடுமே உலகமுமே !



உலராத வகையினிலே
எல்லோரும் உவப்பில்லா
பசுமையினைப் பேணிடுவோம் !
மலர்ந்திடுமே அழகான பூக்களுமே
மலரட்டும் நம்கையில் நம்பிக்கை !!!



புத்துலகம் பொங்கட்டும்
வாழ்வெங்கும் புத்துணர்ச்சித்
தங்கட்டும் எந்நாளும் .
புதுமைகளைச் செய்திடுவோம் !!!



பூக்கட்டும் பனிமலர்கள் எங்கெங்கும்
இதுவன்றோ வேண்டுகின்றேன் காசினியில்
இனிக்கட்டும் நல்லறத்தால்.
எதுவந்த போழ்தினிலும் கலங்காதீர் .
ஏற்றமிகு சிறப்பெல்லாம் வந்துசேரும் .!!!



ஒற்றுமையே ஓங்கிடவே
ஒர்குலமாய் வாழ்தலுமே வேண்டும் !
கற்றவர்கள் கல்லாதான் மனைசென்று
கல்விதனைக் கற்பித்தல் வேண்டும் !



உற்றவர்கள் நாட்டினிலும் .
உன்னதமாய் தமிழ்மொழியே ஆளவேண்டும் .
பெற்றிடுவோம் செல்வமெலாம்
பெருமைபல சேர்ந்திடுமே
உலகினிலே உன்கையில் !!!!



ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Mar-17, 8:24 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 78

மேலே