காதல் பூக்கள்
அவள் கண்கள்
சிந்திய சிற்பிகள்
பவனி வந்தன
என் காற்றடைத்த பையில்
உன்னை பார்த்த நொடியில்
என்னை சிறையெடுத்தாள்
முற்றுப்புள்ளி இல்லாமல்
அடையாளம் தெரியாத அவளுக்காகவா
எரிந்தது என் கனவுகள்
ஆனாலும்
காய்ந்து கருகி போன
செடியில்
வண்ணப் பூக்கள்
பூத்து குலுங்கின
என் மனதில்
இது வரமா! சாபமா!
அமாவாசை இருட்டில்
திடீரென நிலவு
ஒளிர்ந்தார் போல்
இருண்டு கிடைந்த
நெஞ்சில.
ஒளிர்ந்தது விழிகள் விளக்காய்
வண்ண வண்ண
பூக்களை
இரசிக்க சென்றாலும்
கண்கள் இரசிப்பது
என்னவோ
ஒவ்வொரு
ரோஜா இதழிலும்
உன் முகத்தை மட்டுமே
நீ வீதியில் விட்ட
தண்ணீர்தான்
என் வீட்டு
ரோஜா தோட்டத்தில்
உரமாகின
பார்ப்பதற்கு பயன்படுத்திய
உன் விழிகளை பார்த்ததால்
பார்வை இழந்தன என் விழிகள்
நான் இரசித்த
சிறந்த கவிதை
உன் பெயர் தான்
பல்லாயிரக்கணக்கான
விண்மீன்,நிலா மற்றும் பூக்ககளின்
தவத்தில் பிறந்தவளோ!
பார்த்தவுடன் கவர்ந்துவிட்டாய்.
நான் கூறும்
காதலுக்கு
நீ, இரட்டை இலைக்கு
நடுவில் ஒற்றை ரோஜவைத்
தருவாயா
அல்லது
சொற்களை முட்களாக்கி திட்டுவாயா
என்ற
குழப்பத்தில் நிற்கிறேன்
பூவிற்க்கும் தீயிற்க்கும்
இடையில்
இருந்தும் கூறுகிறேன்
என் காதலை
ஆனால் ,
நீயோ மௌனம் சாடிப்பது ஏன்?
மொழகளிளே
சிறந்த மொழி
தமிழ் மொழி என்றார்
பாரதி
ஒரு வேளை
அவரும் காதலித்திருந்தாள்
மொழிகளிளே
மௌன மொழிதான் சிறந்தது என்று
கூறியிருப்பாரோ என்னமோ.
எனினும்
நீ,பிடிக்கும்
மௌன பிடிவாதம் தான்
உன்னையும் என் காதலையும்
இரசிக்க வைக்கிறது
விழிகள் கனவுகளோடு
உலகம் சுற்றினாலும்
கால்கள் என்னவோ
கட்டிலோடுதான்.
கழுகும் கண்டு பிடிக்காத
தூரத்தில் இருப்பதாக
மூளை சொல்கிறது
என் வீட்டு ரோஜா
தொட்டு இரசிக்கும்
தூரத்தில்தான் இருக்கிறாள்
என்று மனம் சொல்கிறது
தாகம் போக்க
கொடுத்த தண்ணீருக்கு
கைமாறாக
கொடுத்தாள் மௌனம் என்ற கண்ணீரை
"பேசாமல் கொள்கிறாள்"
வானம் முழுவதும்
அழுத கண்ணீரை விட
நான் அழுது வடித்த
கண்ணீரின் அழுத்தம் அதிகம்
விதவிதமாய்
வர்ணனைகளோடு எழுதினேன்
கவிதைகள்
ஆனால்
நீ கசக்கி போட்ட
வெள்ளைத்தாளில் எழுதியிருந்த
உன் பெயருக்கு கிடைத்தன பரிசு
சிலபேர் காதலித்து சாகின்றன
சிலபேர் காதலோடு சாகின்றன
ஆனால், நீ மட்டும்
என்னை காதலிக்காமலே
சாக சொல்கிறாயே
நியாமா?
இடி விழுந்த இடத்தில் கூட
நான் சிந்திய கண்ணீர்த்துளியில்
முட்டி முளைத்தன
ரோஜாச் செடி
ஆனால்
உன் இதயத்தில் ஒரு
அறை கூடவா
திறக்கவில்லை?
நீ முட்களால் நிரப்பப்பட்ட
பாதையில்
நெருப்பினால் அலங்கரிக்கப்பட்ட
கோபரத்தில் இருக்கிறாய்
எனினும்
நடக்க தயாராகின கால்கள்
காதல் கொடுத்த தைரியத்தில்.