உள்ளத்தை கொள்ளை கொண்டவள் 555
என்னவளே...
கருப்பு வெள்ளையாக இருந்த என்
வாழ்க்கையில் நீ வந்தாய்...
வானவில்லாக உள்ளம் முழுவதும்
காதலை சுமந்து கொண்டு வந்தாய்...
வண்ணமாக மாறியது
என் வாழ்வு...
காதலியாக வந்தாய் என்
கரம் பிடித்தாய்...
என் பாதைவழி தொடர்ந்தாய்
நீ காதலோடு...
நீ தலை குனிந்து என்
மணமாலை சூடிக்கொண்டு...
என்னை தலை நிமிர்ந்து
நடக்கவை...
உன்னை ராணிபோல்
வாழவைப்பேன் என்றும் நான்...
கருப்பு வெள்ளையான
என் வாழ்வில் வந்தவளே...
என் கரம் பிடித்து
கட்டியணைத்து...
மழலை ஒன்று பெற்றெடடி
உன்னைப்போல்...
நம் மணவாழ்க்கையிலும் காதல்
குறையவில்லை என்று...
காதலித்து கொண்டு இருக்கும்
சில உள்ளங்கள் புரிந்துகொள்ளட்டும்...
என் ஜீவனே.....