அவன் என்னையதான் பாக்குறான்

ஒரு இரயிலின் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கொஞ்சம் தூரம் சென்று இரயில் நின்றது. சிலர் இறங்கினர்,சிலர் ஏறினர். அனைவரும் ஏறிய பிறகு
இரயில் கிளம்பியது. அந்த பெண் அருகே ஒரு அழகான ஆண் வந்து அமர்ந்தான் . அந்த அழகான ஆண்மகனே பார்த்து
இவள் உடம்பில் ஆபரணங்கள் பேச ஆரம்பித்து விட்டன.

அவளுடைய காதணி.....

காதணி :- நான் தங்கமாக இருப்பதால் என்னையதான் அவன் ரசிக்க கூடும்.

அவளுடைய கழுத்து ஜெயின்
....
ஜெயின்:- mr.தோடு. கொஞ்சம் மூடு . நீங்க மட்டுமா தங்கம்? நாங்களும்தான் தங்கம்.
என்னையதான் அவன் ரசிக்க கூடும்

கொலுசு:-(சிரித்துக் கொண்டே) உங்களுக்கெல்லாம் என்னா தகுதி இருக்கு . நிச்சயமா ஒன்னு சொல்லவா? அவன் என்னை பார்த்து ரசிக்க கூடும் . என்னுடைய ஓசை அவன் மனதில் பதியும். அதை அவன் மறக்க முடியாது


.....இதையெல்லாம் வேடிக்கை
பார்த்த செருப்பு சொன்னது

செருப்பு:- அவன் மனசுல பதிவியா என்னான்னு தெரியாது.
ஆனா இவன் இப்படியே பார்த்துக்கிட்டிருந்தான் அவன் கன்னத்துல நான் பதிய வேண்டியது இருக்கும் . அதை அவனால் மறக்க முடியாது.

எழுதியவர் : தியாக.அகிலன் (6-Apr-17, 3:23 pm)
சேர்த்தது : akilan 668
பார்வை : 282

மேலே