தீப்பு சிக்கா
![](https://eluthu.com/images/loading.gif)
பாட்டிம்மா என்ன சொன்னீங்க?
😊😊😊😊😊
நீங்க சொன்னது ஒண்ணும்
புரிலீங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
வாடி பொன்னி. நான் தங்கச்சி
பேத்தியத்தான்டி கூப்புட்டேன்.
😊😊😊😊😊
அவ பேர இன்னொரு தடவ
சொல்லுங்க பாட்டிம்மா.
😊😊😊😊
அவ பேருதான்டி தீப்பு சிக்கா.
😊😊😊😊
என்னது, 'தீப்பு சிக்கா' பேரு
வச்சிருக்காங்க?
😊😊😊😊😊
நான் திப்பு சுல்தானைப் பத்தி
படிச்சிருக்கிறேன். சிக்கா-ன்னு நாங்
கேள்விப்பட்டதில்லையே.
😊😊😊😊
பாப்பா, உம் பேரு என்னம்மா?
😊😊😊😊😊😊
எம் பேரு 'தீப்ஷிகா' (Deepshika).
😊😊😊😊😊😊
ஓ....உம் பேரு 'தீப்ஷிகா'வா?
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்,
தீப்ஷிகா?
😊😊😊😊
'தீப்ஷிகா'-ன்னா lamp -ன்னு எங்க
சொன்னாங்க அக்கா.
😊😊😊
கேட்டீங்களா பாட்டிம்மா. 'தீப்ஷிகா'-
வைத்தான் நீங்க 'தீப்பு சிக்கா' -ன்னு
கூப்பிடீங்க. 'தீப்ஷிகா' -ன்னா
'விளக்கு' -ன்னு அர்த்தமாம்.
😊😊😊😊
ஏன்டி பொன்னி, 'வெளக்கு' -ன்னு
அர்த்தம் தர்ற 'தீப்பு சிக்கா' -ன்னு
வாயில நொழையாத இந்திப் பேர
வச்சதுக்கு 'வெளக்கு' -ன்னே பேரு
வச்சிருக்கலாமே?
😊😊😊😊😊
ஒரு கொழந்தைய 'விளக்கு, விளக்கு'
-ன்னு கூப்புட்டா நம்ம தமிழ் மக்கள்
எல்லாம் சிரிச்சு கிண்டல்
பண்ணுவாங்க பாட்டிம்மா
😊😊😊😊😊
ஓ... அதுக்குத்தான் இந்திப் பேர
புள்ளைங்களுக்கு வைக்கறதா?
நல்லா இருக்குடி பொன்னி, நம்ம
மக்களோட கதை. சினிமாப்
பாத்துட்டு அந்த மயக்கத்தில
இருக்கறவங்க எல்லாம் இப்பிடி
இந்திப் பேரத்தான்டி பொன்னி
புள்ளைங்களுக்கு வச்சு
பெருமப்படுவாங்க.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சிரிக்க அல்ல. சிந்திக்க.