வலிகள் - சகி
சிலநேரங்களில்
மனதில் உண்டாகும்
வலிகளுக்கு அழுகை
ஆறுதலாகும் .....
சில நேரங்களில்
மனதில் உண்டாகும்
வலிகளுக்கு அன்பான
வார்த்தைகள் ஆறுதலாகும் .....
சிலநேரங்களில் மனதில்
உண்டாகும் வலிகளுக்கு
சில உறவுகள்
ஆறுதலாகும் ......
சில நேரங்களில்
நம் மௌனமே
ஆறுதலாகும் ........
மனம் எதிர்பார்ப்பது
உண்மையான உறவும்
அன்புமே .........
வலி இல்லா
வாழ்க்கைக்கு அன்பே
போதும் ......
ஏனோ அதுமட்டும்
வாழ்வில் கிடைப்பதில்லை ....
என்வாழ்வில் .......