பொதுவுடைமை மானிடா

சிறகை அடித்து வானில் பறக்கிறது .
உறவைத் தேடி உலகில் அலைகிறது .
பறவை தன்னின் சிறகை அழிக்காதீர் .
நெருங்கி நேசக் கரம் நீட்டுங்கள் !!!


மனிதன் கைக்கொள்ளும் மனித நேயம்
புனிதன் என்றே அவனைப் புவிதனில்
காட்டிடும் சான்று . சுதந்திரமாய்ச்
சுற்றித் திரியும் பறவையை
பறக்க விடு வானில் !!!


உயிர்களிடத்து அன்பு வேண்டும் .
என்றும் உறவாய்க் காத்திடல் வேண்டும் .
விடுதலை உணர்வு அனைத்திற்கும்
பொதுவுடைமை மானிடா !! உணர் நீ இதை !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Apr-17, 8:20 pm)
பார்வை : 78

மேலே