மரணத்தை எதிர்நோக்கி

வாழ்க்கையென்னும் தண்டவாளத்தில்,
காலமென்னும் இரயிலேறி,
வயதென்னும் தூரங்கள் பல கடந்து யாருமில்லா இரயில் நிலைத்தில் இறங்கிவிட்டேன் நானுமொரு அநாதையாய்....

முன்னேறிச் சென்ற இரயிலே, பின்னோக்கி செல்லாயோ?...
அநாதையாகிய என்னையும் அழைத்துச் செல்லாயோ??....

அம்மாவின் கருவறையில் மீண்டும் கருவாகி, பிறந்து யாவரும் நேசிக்கும் மழலையாய் மடியில் தவழ்ந்து, அன்பு அக்காவிடம் மீண்டும் அன்பைப் பெற்று,
அம்மா, அப்பாவின் பிரிவைத் தடுத்து, இழந்த காதலை மீட்டெடுத்து, உண்மையான கல்விப் பெற்று, குடும்பத்தோடு காலமாகிய இரயிலே உன்னிலேறி இவ்விடம் வர, மீண்டுமொரு வாய்ப்புத் தாராயோ???...

திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லையெனத் தெரிந்தும் உன்னிடம் மண்டியிட்டு மன்றாடுகிறேன், உள்ளத்தில் ஆழப் புதைந்த நினைவுகளாலே நிம்மதி இழப்பதாலே....

உன்னால் திரும்பிச் செல்ல இயலாவிடில் உனது வேகத்தை அதிகமாக்கி மரணமென்னும் நுழைவாயிலுக்கு என்னை உடனே அழைத்துச் செல்வாயாக....

துன்பங்களால் நிறைந்து, மற்றவர்களின் வெறுப்பைச் சம்பாதித்தவனாய் நிம்மதியற்று வாழ்வதை விட, மரணவாயிலில் நுழைந்து நிரந்தர நிம்மதியைப் பெற வழி செய்வாயாக...

புறப்பட்டுவிட்டேன்...
அழைத்துச் செல்வாயாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Apr-17, 7:38 pm)
பார்வை : 1776

மேலே