வாழ்க்கை

எத்தனைகோடி இன்பம் படைத்த இறைவன்
துன்பங்களும் சேர்த்து படைத்தான்-ஏன் என்றால்
இன்பமே வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்தால்
துன்பம் வந்து தாக்க எதிர்த்து நிற்க இயலாது போகும்
துன்பம் வந்து மறைந்து இன்பம் வந்து போனால்
இன்பம்,துன்பம் மாயை அறிந்திடலாம்
துன்புறுத்தும் கோடை வையில் -அலறும்போது
நிழல் தரும் மரங்கள் எதிர்ப்படுமே அங்கு
ஆற்றங்கரை தென்றலும் இதம் தர வீசும் காற்று !
இப்படித்தான் படைப்பில் இறைவன் பருவங்கள் தந்தான்
பல பல உணர்வுகள் தந்திட , ருசிகள் தந்தான் பல பல !
நல்ல ஆரோக்கியம் தந்தான் நோய்களும் தந்தான் !



இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்திக்க புலப்படும்
வாழ்வின் நிலையாமை -இது புரிந்தால்
கல்லும்,மண்ணும் போல் தென்படும் தங்கமும்
ஆசைகள் மறைந்துபோகும் நம் இதய கோவில்
கதவுகள் திறக்கும் அங்கு இறைவன் புலப்பட
நம்மை நாம் உணர்வோம் இதுதான் பேரின்பம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-17, 7:04 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 388

சிறந்த கவிதைகள்

மேலே