நிலவு தூங்கும் நேரம்

..............நிலவு தூங்கும் நேரம்............

அணைந்திடும் மெழுகுவர்த்தியோடு
இணைந்தே இவளும் தினம் தினம்
உருகிக் கரைகிறாள்
வழிகின்ற உதிரத்தின் மேலே
கண்ணீரைக் கவிதையாய் ஆக்குகிறாள்

நான்கு சுவர்களின் நடுவில்
நடந்திடும் யுத்தத்தில் கருகிய
மொட்டாய் இவளும் மலர்கிறாள்
சிவப்பு விளக்கு விடுதியில்
சிதைந்தே இவளும் போகின்றாள்

இறக்கை ஒடிந்த பறவையாய்
சிறைக்குள் சிக்கித் தவிக்கிறாள்
விடியாமல் கழியும் இரவுகளில்
தன் பெண்மையை அடகு வைத்தே
விலைமாதுவாய் வேடம் தாங்குகிறாள்

நிலவு தூங்கிடும் நேரத்தில்
நித்திரை இழந்து தவிக்கிறாள்
விடியல் தொலைந்த இரவுகளில்
கட்டில் கல்லறையில் உயிரோடே
இவளும் சமாதியாகிறாள்...

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (6-Apr-17, 5:29 pm)
பார்வை : 1083

மேலே