உனக்காக மட்டுமே இந்த வரிகள்..

என் வரிகளுக்குள் இருக்கும்
என் வலிகள்,
உனக்குள் இருக்கும் என்ற
அவ/நம்பிக்கையில்,
உனக்காக மட்டுமே
இந்த வரிகள்..
டிசம்பர் 2014
என் வாழ்வில்
மறக்க நினைத்தும்,
நிலைத்திருக்கும் மாதம்..
நீ என்னைப் பிரிந்த
இரு வருடங்கள்,
இரு நொடியில்
கடந்துவிட்டன..
காலத்தின் ஓட்டத்தில்,
மாற்றங்கள் இல்லாமல் இல்லை..
கஷ்டங்கள் பல வந்தபோதும்,
நான் தேடிய உன் ஆறுதல்
வார்த்தைகள் மட்டும்
கிடைக்கவில்லை,
தேவையில்லைதான்..
நீ பிரிந்த போதே
என் இதயம் கல்லாகிவிட்டதால்
இனி எந்த கஷ்டத்தையும்,
தாங்கவும் பழகிவிட்டேன்..
சந்தோசங்களுக்கும் குறைவில்லை,
அதை உன்னிடம் பகிரமுடியாமல்,
உதட்டில் சிரிப்பும்,
உள்ளத்தில் தவிப்பும் வைத்து
நடிக்கவும் பழகிவிட்டேன்..
நண்பர்கள், உறவினர்கள் என
பலர் இருந்தும்,
மனதால் தனிமையை
உணர்கிறேன்..
உன் நினைவுகளற்ற நாட்கள்
இந்த இரு வருடத்தில்
இருந்ததாய் தோணவில்லை..
நான் ஒருவன் இருப்பதையே
நீ மறந்துவிட்டால் விட்டுவிடு,
வாடிவிடமாட்டேன்..
உனக்குள்ளும்
என் நினைவிருந்தால், வந்துவிடு,
நட்புக்கு
பணம் மட்டுமல்ல,
ஜாதகமும் தேவையில்லை,
ஜாதியும் தேவையில்லை..
என்றாவது ஓர் நாள்,
தோழியென்ற முறையிலாவது,
என்னிடம் பேசுவாயெனும்
அவ/நம்பிக்கையில்தான்
இத்தனை வரிகளையும் வடிக்கிறேன்..
I'm just waiting for ur reply / your fb timeline..
#கே.ஆர்.வி