காதல் வீரன்

இமயத்தில் ஏறி சேர்க் கும் பெருமையை விட
உன் இதயத்தில் குடியேறுவதையே பெருமையென்பேன்!

ஆழ்கடலில் மூழ்கி முத்து குளிப்பதை விட
உன் அன்பு கடலில் மூழ்குவதையே இனிமையென்பேன்!

வில்அம்புகளால் விலங்கினங்களை வேட்டையாடுவதை விட
என் விழியம்புகளால் உனை வேட்டையாடுவதையே விருப்பமென்பேன்

உன் அன்பின் ஆழம்
ஆலம் விழுதென்றால் நான் வேராவேன்!

எழுதியவர் : உமா (10-Apr-17, 7:55 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : kaadhal veeran
பார்வை : 91

மேலே