வாழ்க்கையின் தெருக்கூத்து

"கண்ணை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன்
குணத்தை நலமாக வைத்துக் கொள்கிறான்
முகத்தை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன்
புன்சிரிப்பை உருவாக வைத்துக் கொள்கிறான்
உடலை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் - அதில்
உலகை உருவாக வைத்துக் கொள்கிறான்
மனதை நலமாக வைத்துக் கொள்கிறான் அவன் - அதில்
உண்மை உருவாக வைத்துக் கொள்கிறான்
காரணம் காரியம் ஆயிரம் உண்டிங்கு
எது வந்தாலும் எதிலும் மனநிறைவு வேண்டுமிங்கு
மனிதர்கள் குலம் காக்க ஒழுக்கமாய் வளர்த்தெடுக்க
வலி இன்றி வளம் சேர பழையதை விட்டொழிக்க
உணவை ஆக்கியே ஆதாரம் செய்தோம்
இன்று உணவை வீணாக்கியே சேதாரம் செய்தோம்
மாற்றான் என்று இங்கு நமக்கு இல்லை
மாற்றி வைப்போம் இனி தொல்லை இல்லை
தேவைக்கு மட்டும் தேடி பெறுவோம்
தேக்கி வைத்ததை சேவைக்குக் கொடுப்போம்
வாரணம் ஆயிரம் வந்தனம் சொல்லும்
வாசனை விலக என் வசனம் மலர்களாய் வீசும்
மனதால் மெலிந்தால் உலகம் விரும்பும்
உடலால் மெலிந்தால் மனமே இறுகும்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (3-May-24, 8:20 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 33

மேலே