தொலைந்து போனது

தாத்தா ஏறு உழ காளமாட்ட பூட்டிக்கிட்டு போகயில
சேவ கூவ மறந்த நாளுலுலக்கூட
மாட்டோட சலங்க சத்தம்கேட்டு எந்திரிப்போம்.........
மதியானம் கலியகிண்டி கருவாட்டு கொழம்புவச்சி
பாட்டியம்மா எடுத்துகிட்டு போகயில
வாண்டுங்க நாங்க வெரப்புமேல
ரயில்பயணம் போன நினைவு இன்னும் இருக்கு.........
அப்ப இருந்த வயலும் வெரப்பும் இப்ப
கான்கிரீட் போட்ட அடுக்குமாடியா கிடக்கு
வயலுக்கு போயி சேரும்வர பாட்டி சொன்ன
விக்கிரமாதித்தன் கதையின்னும் ஞாபகமிருக்கு
கதசொன்ன தாத்தாவும் பாட்டியும்தா இப்ப இல்ல...............