மிட்டாய்

மிட்டாய்:

போட்டாய் ஓட்டாய், மாறியது நாடு தீட்டாய்,
இருந்தாலும் மூட்டாய்.

வீட்டாய், கூட்டாய் பெரும் அவஸ்தை பட்டாய்,
இருப்பினும் திருந்த மாட்டாய்.

களைந்தாய் சீட்டுக் கட்டாய்,
தாளிட்டு கதவில் இட்டாய்,
பெரிய பூட்டாய்.

ஏட்டாய், பாட்டாய் நாட்டை மீட்டாய்,
மின்னியது பொன் தட்டாய்.
இனி சொட்டு சொட்டாய்
இனிக்கும், இந்த மிட்டாய்!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (11-Apr-17, 9:57 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : mittaai
பார்வை : 77

மேலே