ஆணவம்
மண் சிறகுகளில் பறக்கும் எண்ணம் ஆணவம்
அது தந்தி அறுந்த வீணை பாடும் முகாரி ராகம்
பேயாட்டம் ஆடி அடங்கும் உணர்ச்சிக் கூட்டம்
பொய்யேனும் புகன்று புரையேறும் களியாட்டம்
நானென்றும் எனதென்றும் முரசு கொட்டும்
அகந்தை என்ற நாகம் படமெடுத்தாடும்
கரு இருட்டில் கண் கூசும் வெளிச்ச கீற்று
காணுகின்ற மனச்செருக்கு மாய காற்று
ஓயாது ஒழியாது அலை மோதும் நெஞ்சம்
அறியாமை கொண்டு வாய் ஆவேசம் பேசும்
பிறர் வினைகள் யாவும் குற்றமென்று கூறும்
அதை களையாவிடில் உயிர் கரைந்து போகும்
மென்மையான இதயமே கவனம் கவனம்
ஆரவாரத்தோடு வரும் அரவம் உன் கதவு தட்டும்
தன் அழிவு தானறியா ஆணவம் அது
ஆண்டவன் துணை கொண்டு அதை தூரப்போடு