போராட்டம்

" போராட்டம் "

பிறந்தால் பறவையாக
பிறந்து விடு
இல்லை மறைந்து விடு.....!

மறக்க கற்று கொண்ட
என்னால்
பறக்க கற்று கொள்ள
முடியவில்லை ....!

மனித வாழும் வாழ
முடியவில்லை .....!

ஒவ்வொரு இனமும்
வாழ்கிறது
என்னவாக பிறக்கிறதோ
அதுவாகவே
மனிதனை தவிர ...!

இனத்தையும் இன்பத்தையும்
மறந்து இயந்திரமாய் வாழும்
ஓர் பிறவி மனிதம் மட்டுமே ....!

எந்திர வாழ்வில்
தந்திரமாய்
வாழ தெரிந்தளவு
வாழ்நாளில்
வசந்தமாய்
வாழ தெரியவில்லை ...!

நான் மட்டும் என்ன
விதிவிலக்கா ..
இல்லை விவேகானந்தரின்
மதி வழக்கா.....!

விதையாய் பிறந்திருந்தால்
விண்ணை தொட்டிருப்பேன்
விதியோரின் வீழ்ச்சியை
வீழ்த்த....!

மனிதனாய் பிறந்து
விட்டேன், அதில் ஓர்
பெண்ணாய் ...
மண்ணாய் போகும்வரை
மாறபோவது இல்லை
மனித போராட்டம் ...
மனப்போரட்டம் ...!!

வினோ . வி ...

எழுதியவர் : வினோ . வி ... (11-Apr-17, 8:31 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : porattam
பார்வை : 118

மேலே