மனதின் ஓசைகள்

உன் அருகாமையின்
வாசம் கேட்கிறது
என் மனம் ,,,,
நீயோ
வெயிலில் முளைத்த
கானல் நீரென்று தெரியாமல் ,,,,,!

என் டைரி ஏடுகள்
கூறுகின்றன
சீக்கிரம் உன்னவளை பற்றி
எழுதி விடு என்று ,,,,
சுவாசம் இன்றி
தவிக்கிறதாம்,,,,,
அதுவும்
உந்தன் வாசம் இன்றி ,,,,!

என் கவிதை வரிகளை
பிடித்தால் போதும்
அவைகளே உன்னை
காதல் செய்ய சொல்லும்,

ஒரு போதும்
மறுத்து விடாதே பெண்ணே
மரணம் அதற்கு
பழக்கமில்லை ,,,,,!

எழுதியவர் : தங்கதுரை (17-Apr-17, 4:21 pm)
சேர்த்தது : தங்கதுரை
பார்வை : 196

மேலே