கிராமிய காதல்
வட்ட நிலா உன் முகம்
வாடுதே என் மனம்
பத்தாமல் பத்த வச்ச
பாவி என்னை ஏங்க வெச்ச
சொக்காமல் சொக்க வச்ச
சொல்லாமல் சொல்ல வச்ச
தண்ணி கூட இறங்கல
தவிக்கறேன் புள்ள துடிக்கறேன்
வாய்க்காலு வரப்போரம்
வந்து நானு நிக்கட்டுமா
கஞ்சி கொண்டு போற புள்ள
கண்ணோரம் பார்த்து போயேன்
பச்சரிசி பல்லழகி நீ
பரிசம் போட வரட்டுமா
முந்தானை முடிச்சுல
முடிய முத்தம் தரட்டுமா