அழகு சொல்ல வார்த்தை இல்லையே

கவர்ந்த கள்வன் முகம் தேடும் முகில்கள்
உடல் குளித்தும் தலை துவட்டா கொடிகள்
தலை குனியா தெழுந்து நிற்கும் மரங்கள்
மழையில் நனைந்தும் காய்ச்சல் வாரா மான்கள்
கிளைகள் நடுவே களவாய்க் கொஞ்சும் கிளிகள்
வண்டின் முத்தம் வாங்க ஏங்கும் மலர்கள்
தாளம் தப்பா இசை பாடும் குயில்கள்
பளிங்கு ஆடை தரித்து ஆடும் மயில்கள்
பூமிப் பெண்ணை அணைத்து மகிழும் நதிகள்
நீரில் நீந்தி உலகம் சுற்றும் மீன்கள்
ஏறி நின்று உலகை ரசிக்கும் மலைகள்
இயற்கை சொல்ல வார்த்தை இழந்த மொழிகள்
வியப்பால் கிறங்கி நிற்குது எனது விழிகள்
ஆக்கம்
அஷ்ரப் அலி