யானை
௧ .ஆனை வாலாட்டுகிறது என்று
ஆட்டுக் குட்டியும் வாலாட்டியதாம் !
௨ .ஆனைக்கும் அடி சறுக்கும் !
௩ . யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் !
௪ . ஆற்று வெள்ளம் பாலத்திற்கு மேல் பெருகி ஓடியது
யானைக்கென்ன கடந்து அக்கரையை அடைந்தது .
யானை வாலிலிருந்து ஒரு கட்டெறும்பு தரையில் குதித்தது
நானும் வெள்ளத்தைக் கடந்துவிட்டேன் என்று பெருமை அடித்துக்
கொண்டது .
௫ . தேங்காயின் மேல் குருவி ஒன்று வந்து அமர்ந்தது .
தேங்காய் தென்னையின் கீழ் நின்று கொண்டிருந்த யானையின்
தலையில் தொப்பென்று விழுந்தது.
யானையாரே வலிக்கிறதா என்று கேட்டது குருவி .
லேசாக என்று சிரித்துக் கொண்டே சொல்லிற்று யானை .
௬ . ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த யானை குருவியிடம்
என் முதுகில் உட்கார்ந்து கொள் அக்கரையில் கொண்டுவிடுகிறேன்
என்று சொன்னது .
எனக்கு சிறகில்லையா நான் பறந்து சென்று கொள்வேன் என்று சொன்னது
குருவி.
நட்புணர்வில் சொல்கிறேன் இன்று என் முதுகில் சவாரி செய்து பாரேன்
என்றது .
ஓகே என்று குருவி .யானை முதுகில் அமர்ந்தது குருவி
யானை மெல்ல மெல்ல ஆற்றில் நடந்தது .
ஐயோ இது சரிப்படாது யானை அண்ணே இந்த வேகத்தில் நான்
என்னிக்கு அக்கரை பொய் சேர்வது என்று விருட்டென்று பறந்து
அக்கரை போய் யானைக்கு சிறகால் பை பை சொல்லிற்று குருவி.
யானையும் தும்பிக்கையை உயர்த்தி BYE சொல்லிற்று .
௭ . ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் .
௮ . மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை .------திருமூலர்
௯ . பெண்களின் நடையை பிடி நடை என்பார்கள் .
பிடி என்றால் பெண் யானை .
தோற்றத்தில் யானைக்குச் சவால் விடுகிறவர்களின் நடையை எப்படி
வர்ணிப்பது ?
-----கவின் சாரலன்
தொடரலாம் ....