கவிதை கோடைமழை

கோடை மழை
கவிதை by : பூ.சுப்ரமணியன்


வாடிய பயிர்கள்
நாடுவதோ பருவமழை
தாகம் தணிக்க
தேடி அலையும் உயிர்கள்
நாடுவதோ கோடைமழை !

சூரிய வெப்பம் தணிந்து
சுற்றிவரும் பூமியும்
கொட்டும் கோடைமழையில்
குளுமை அடையும் !

இடிமுழக்கம் காணும்
கோடைமழை
வெடிப்பு காணும் நிலங்கள்
ஒட்ட வைக்கும் !

கொட்டும் கோடைமழை
வாடும் விவசாயிகள்
வேதனை நீக்கும்
தாகம் தணிக்கும் !

கோடைமழை பொழிந்து
குளுமை நிறைந்தால்
கொடைக்கானல் ஊட்டி
குளுமை தேடி
மக்கள் அலையமாட்டார் !

கோடைமழை
நம் வியர்வைத்துளிகளை
நலமுடன்
துடைக்கும் நீர்த்துளிகள் !

நடக்கும் யானைகள்
நிற்கும் மரங்கள்
ஓடும் மான்கள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
பறக்கும் பறவைகள்
தாகம் தணிக்க
ஏங்கி அலையும்போது
கோடைமழையே வருக
கருணை மழை பொழிக!

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (21-Apr-17, 1:48 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 192

மேலே